ராஜகோபுரம் கட்டும் பணி குறித்து பகவதி அம்மன் கோவிலில் ஸ்ரீரெங்கம் ஸ்தபதி ஆய்வு
- ராஜ கோபுரத்தின் அஸ்திவார பகுதி நில அளவீடு செய்து முதல் கட்ட பூர்வாங்க பணி தொடங்கப்பட்டது.
- ராஜகோபுரத்துக்கான கல்காரத்தின் ஸ்திரத் தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜ கோபுரம் இல்லாதது பெரும் குறையாகவே இருந்து வருகிறது. எனவே இந்த கோவிலுக்கு மிக பிரம்மாண்டமான வகை யில் ராஜகோபுரம் கட்ட வேண்டும் என்று பக்தர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்படி அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் ஏற்கனவே கட்டப்பட்டு பாதியில் நின்று போன ராஜ கோபுரத்தின் அஸ்திவார பகுதி நில அளவீடு செய்து முதல் கட்ட பூர்வாங்க பணி தொடங்கப்பட்டது. அங்கு வளர்ந்திருந்த மரங்கள் வெட்டிஅகற்றப்பட்டன. ராஜகோபுரத்துக்கான கல்காரத்தின் ஸ்திரத் தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இந்தியாவிலேயே மிக உயரமான ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தை கட்டிய சிவப்பிரகாசம் ஸ்தபதியின் மகனும் அரசு அங்கீகாரம் பெற்ற ஸ்தபதியுமான ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஆனந்த் ஸ்தபதி, இந்து அறநிலையத்துறை மண்டல ஸ்தபதி செந்தில் ஸ்தபதி ஆகியோர் நேரில் பார்வை யிட்டு இந்த ஆய்வு பணி களை மேற்கொண்ட னர். இந்த ஆய்வின் போது நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.