உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதி மாணவர்-தொழிலாளி படுகாயம்

Published On 2022-11-13 07:36 GMT   |   Update On 2022-11-13 07:36 GMT
  • மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
  • படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

கன்னியாகுமரி:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞத்தை சேர்ந்தவர் பிஜூ. இவரது மகன் லெஜி (வயது 20). இவர், ஆறுதெங்கன்விளையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் கல்லூரி முடிந்து மாலை புதுக்கடையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தங்கிவிட்டு மறுநாள் காலை கல்லூரிக்கு வருவது வழக்கம்.

சம்பவத்தன்று மாலை கல்லூரி முடிந்து லெஜி வழக்கம்போல் உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். மணவாளக்குறிச்சி கடந்து பரப்பற்று சந்திப்பில் செல்லும்போது முன்னால் பெரியவிளையை சேர்ந்த மீன் பிடி தொழிலாளி வல்லேரியன் (48) மோட்டார் சைக்கிளை திடீரென வலதுபுறம் திருப்பினார். இதில் லெஜி பைக் மீது மோதியதில் இரு வரும் கீழே விழுந்து படு காயமடைந்தனர்.

இதில் வல்லேரியனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ராஜாக்கமங்கலத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். லெஜிக்கு லேசான காயம் ஏற்பட்டதால் அவர் அருகில் ஒரு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வல்லேரியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணவாளக்குறிச்சி அருகே பாணான்விளையை சேர்ந்தவர் ரெத்தினசுவாமி (வயது 73). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். சம்பவத்தன்று இவர் வீட்டு முன் உள்ள சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் ஒன்று ரெத்தினசுவாமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு மார்த்தாண்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ரெத்தினசுவாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அவரது மகள் பிரதீபா (32) மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News