உள்ளூர் செய்திகள்
கொல்லங்கோடு பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்
- குழந்தைகளையும் கடிக்க துரத்துவதனால் அவர்கள் பயத்தில் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர்
- பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொல்லங்கோடு :
கொல்லங்கோடு பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளையும், சாலையில் நடந்து செல்லும் குழந்தைகளையும் கடிக்க துரத்துவதனால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் தெருநாய்கள் இரவு நேரத்தில் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொள்வதினால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இரவில் ஒருவித அச்சத்துடன் செல்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.