18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
- தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
- நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்களின் தேர்தல் பணி குறித்து ஆலோசனைகள் வழங்க உள்ளார்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் மாநகர செயலாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், பாபு, பிராங்க்ளின், செல்வம், லிவிங்ஸ்டன், பி.எஸ்.பி.சந்திரா, சுரேந்திரகுமார், ரமேஷ் பாபு மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
01.01.2024 நாளை தகுதி ஏற்பு நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தத்தினை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் 01.01.2024-ல் 18 வயது நிரம்பியவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத பெயர்களையும், புதியதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், தொகுதியில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்பொழுதுள்ள பட்டியலில் நீக்கவும் தீவிர நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
வருகிற 17-ந்தேதி ராமநாதபுரத்தில் நடைபெறும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்களின் தேர்தல் பணி குறித்து ஆலோசனைகள் வழங்க உள்ளார்.
எனவே குமரி கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல் ஆகிய 3 சட்டமன்றத்திற்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி முகவர்களும் தவறாமல் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.