உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான சக்கரதீர்த்தக்குளத்தில் உழவாரப்பணி செய்த சிவனடியார்கள்

Published On 2022-06-27 08:29 GMT   |   Update On 2022-06-27 08:29 GMT
  • புண்ணிய தீர்த்தம் நிறைந்த சக்கர தீர்த்தகுளம் குப்பைகூழங்கள் நிறைந்து காணப்பட்டது
  • மிதவைகளைப் பயன்படுத்தி கழிவுகளை அகற்றினர்

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சந்திப்பில் விசாலாட்சி அம்பாள் உடனுறை சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் திருக்கோவில் அமைந்துஉள்ளது.

இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கோவிலாகும். இந்த கோவிலின் முன்பு சக்ர தீர்த்த குளம் அமைந்துஉள்ளது. இந்தக் குளம் புண்ணிய தீர்த்தம் நிறைந்ததாகும்.

எனவே இந்த கோவிலுக்கு வரும் சிவனடியார்கள் இந்த சக்கர தீர்த்த குளத்தில் புனித நீராடி விட்டு சிவபெருமானை வணங்குவது வழக்கம். அப்படிப்பட்ட புண்ணிய தீர்த்தம் நிறைந்த சக்கர தீர்த்தகுளம் குப்பைகூழங்கள் நிறைந்து காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி நற்பவி உழவாரப்பணி குழு வைச்சேர்ந்த சிவனடியார்கள் இந்த சக்கர தீர்த்தக்குளத்தில் உழவாரப் பணியை நேற்று மேற்கொண்டனர்.

அப்போது தண்ணீர் நிரம்பி கிடந்த இந்த குளத்தில் மிதந்து கொண்டிருந்த குப்பைகூழங்கள் மற்றும் செடி கொடிகளை சிவனடியார்கள் மிதவை கருவிகள் மூலம் குளத்தில் நீந்தி சென்று அகற்றி வெளியேற்றி குளத்தை சுத்தம் செய்தனர்.

இந்த உழவாரப்பணி கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சக்கர தீர்த்தகாசி விஸ்வநாதர்தி ருக்கோவில் நிர்வாகக்குழுவைச்சேர்ந்தநாகராஜன், பிரபாகரன் ஆகியோர்முன்னிலையில் நடந்தது. இதில்ஏராள மானசிவனடியார்கள் கலந்து கொண்டு இந்த உழவாரப் பணியை செய்தனர்.

Tags:    

Similar News