உள்ளூர் செய்திகள்

அக்னிபத் திட்டத்தில் ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு

Published On 2022-08-22 10:00 GMT   |   Update On 2022-08-22 10:00 GMT
  • வெளி மாவட்டங்களில் இருந்து வந்த இளைஞர்கள் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் குவிந்தனர்
  • செப்டம்பர் 1-ந் தேதி வரை ஆள் சேர்ப்பு முகாம் நடக்கிறது.

நாகர்கோவில்:

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 17 மாவட்டங்களை சேர்ந்த 36 ஆயிரம் இளைஞர்களுக்கு அழைப்பு அனுப்ப்பட்டு, தினமும் 3 ஆயிரம் பேர் தேர்வுக்கு அழைக்க ப்பட்டு உள்ளனர்.போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த தேர்வு நள்ளிரவில் மட்டுமே நடக்கிறது.

நேற்று முன்தினம் தொடங்கிய ஆட்கள் தேர்வு, இன்று ( திங்கட்கிழமை) 3-வது நாளாக நடக்க உள்ளது. தேர்வில் பங்கேற்ப தற்காக வெளிமாவட்ட இளைஞர்கள் தினமும் ரெயில் மூலம் நாகர்கோவில் வருகின்றனர்.

அவர்கள் தேர்வு முகாமில் பங்கேற்று விட்டு மீண்டும் ரெயில் மூலம் ஊருக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்.

இரவில் தேர்வில் பங்கேற்று விட்டு காலையில் ரெயில் நிலையம் வருபவர்களுக்கு இரவில் தான் ரெயில் உள்ளது என்பதால் அங்கேயே தங்கி ஓய்வு எடுக்கின்றனர்.

இதனால் நாகர்கோவில் ரெயில் நிலையம் கடந்த சில நாட்களாக களை கட்டி காணப்படுகிறது. செப்டம்பர் 1-ந் தேதி வரை ஆள் சேர்ப்பு முகாம் நடக்கிறது.

Tags:    

Similar News