உள்ளூர் செய்திகள்

பரப்பற்று கிருஷ்ணன் கோவிலில் இருந்து யானை மீது சந்தனகுடம் பவனி

Published On 2022-08-20 07:46 GMT   |   Update On 2022-08-20 07:46 GMT
  • பரப்பற்று ஜங்சன், கூட்டுமங்கலம், புதூர் வழியாக மண்டைக்காடு கோவிலை அடைந்தது.
  • பரப்பற்று ஜனார்த்தன கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த 16-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

கன்னியாகுமரி:

பரப்பற்று ஜனார்த்தன கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த 16-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

விழாவில் கணபதி ஹோமம், அகண்டநாம ஜெபம், அன்னதானம், தீபாரா தனை, லட்சார்ச்சனை, சுழலும் சொல்லரங்கம், பகவத்கீதை பாராயணம், சமய வகுப்பு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நான்காம் நாளான நேற்று காலை சுமங்கலி பூஜை, மாலை மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு சீர்வரிசை யுடன் யானைமீது சந்தனகுடம் பவனி நடந்தது.

பவனியானது பரப்பற்று ஜங்சன், கூட்டுமங்கலம், புதூர் வழியாக மண்டைக்காடு கோவிலை அடைந்தது. இரவு சமய மாநாடு, பரிசு வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. ஐந்தாம் நாளான இன்று காலை 9 மணிக்கு பண்பாட்டு போட்டிகள் நடைபெற்றது.

மாலை 4 மணிக்கு உறியடி, 5 மணிக்கு சுதர்சன ஹோமம், 6.45க்கு திருவிளக்கு பூஜை, இரவு 10.30 மணிக்கு நெய்யப்பம் சுடுதல், இரவு 12 மணிக்கு அபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News