உள்ளூர் செய்திகள்

சாமிதோப்பில் சாமி தரிசனம் - அய்யா வைகுண்டர் அவதார தினத்தன்று பொது விடுமுறை அறிவிக்க அரசிடம் வலியுறுத்துவோம்

Published On 2023-11-16 06:59 GMT   |   Update On 2023-11-16 06:59 GMT
  • தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
  • நிகழ்ச்சியில் தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தென்தாமரைகுளம் :

தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று மதியம் கன்னியாகுமரி வந்தார். இதையடுத்து மாலையில் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதி சென்றார். அங்கு அவரை தலைமைபதி சார்பில் குருமார்கள் சாமி, தங்க பாண்டியன், ராஜசேகர், அரவிந்த், ஆனந்த், அஜித் ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து வடக்கு வாசல் வழியாக பதிக்கு வந்த பிரேமலதா விஜயகாந்த் அய்யா வைகுண்டரை சாமி தரிசனம் செய்தார். அவருக்கு இனிமம் வழங்கப்பட்டது.

அதன்பின் அவர் பேசியதாவது:-

தே.மு.தி.க. ஆட்சியாக இருந்திருந்தால் இந்த இடத்திலே மாசி 20 அய்யா வைகுண்டர் அவதாரதினத்தன்று பொது விடுமுறை அறிவித்திருப்போம். மாசி 20 பொது விடுமுறையாக அறிவிக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்படும்.

இங்கு உருவ வழிபாடு இல்லை. கண்ணாடி வைத்து அதில் நமது முகமே தெரிகிறது. அது என்னை மிகவும் கவர்ந்துள்ளது. தலைவர் விஜயகாந்த் சொல்வது போல் இங்கு நமக்குள் மதம், ஜாதி, இனம், மொழி என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் ஒரே இனம், ஒரே குலம் என்பது தான் இங்கு தத்துவம். விஜய காந்த் மீண்டும் அதே கம்பீரத்துடன் இங்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய அய்யாவிடம் பிரார்த்தனை செய்துள்ளேன். ஒரு உயர்ந்த கொள்கை தத்து வத்துடன் இக்கோவில் அமைந் துள்ளது. தமிழ்நாட்டிலேயே எல்லோரும் சமம் என்கிற ஒரு தலமாக நான் இதை பார்க்கிறேன். அய்யா வைகுண்டரை தரிசனம் செய்தது மன நிறைவாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News