உள்ளூர் செய்திகள்
மார்த்தாண்டம் அருகே பள்ளியில் திருடிய கொள்ளையன் கைது
- பள்ளி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்
- மார்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த மாதம் நள்ளிரவில் பள்ளிக்குள் புகுந்து அங்கிருந்த ஸ்பீக்கர் திருடப்பட்டிருந்தது.
இதையடுத்து பள்ளி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மார்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து போலீசாரின் தீவிர விசாரணைக்கு பிறகு மார்த்தாண்டம் கொடுங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெசீம் (வயது 22) என்பவரை பிடித்து விசாரணை நடத்திய போது ஜெசீம் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஒரு மாதத்திற்கு பின்னர் குற்றவாளி அதிரடியாக கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.