உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.39 லட்சம் மதிப்பில் சாலை பணிகள்
- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சி 31-வது வார்டு மேலராமன்புதூர் கீழ தெருவில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியையும், 44-வது வார்டுக்குட்பட்ட கேம்ப் ரோடு பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தார் தளம் அமைக்கும் பணியையும்
மேயர் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து எஸ்.எல்.பி. பள்ளியில் நடந்த விழாவில் பங்கேற்ற அவர், மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
நிகழ்ச்சிகளில் துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவர் செல்வ குமார், மாமன்ற உறுப்பினர் சோபி, நவீன்குமார், தி.மு.க மீனவரணி மாநில துணைச் செயலாளர் நசரேத் பசலியான், மணி வேல்முரு கன், பகுதி செயலாளர் சேக்மீரான், ஜீவா, வட்ட செயலாளர்கள் துரைசாமி, இளைஞரணி அகஸ்தீசன், சரவணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்