உள்ளூர் செய்திகள்

சாலை பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தபோது எடுத்த படம் 

கிள்ளியூர் பேரூராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் சாலை பணிகள்

Published On 2022-10-26 08:09 GMT   |   Update On 2022-10-26 08:09 GMT
  • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
  • பணிகளை விரைந்து முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் கிள்ளியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலைகள் அமைக்க திட்ட மிடப்பட்டது.

இதற்கான பணியை அமைச்சர்மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், மாவட்டத்தில் பேரூராட்சி கள், ஊராட்சிகள், மாநக ராட்சி, நகராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் நலன் கருதி சாலைகளை சீரமைத்தல், மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, கிள்ளியூர் பேரூராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட ஐரேனிபுரம் கூட்டுறவு வங்கி முதல் பேராலி வரையில் 15-வது நிதிக்குழு மானிய நிதியின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில், கிள்ளியூர் பேரூராட்சி தலைவர்சீலா சத்தியராஜ், துணைத்தலை வர் சத்தியராஜ், கோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News