உள்ளூர் செய்திகள்

தோவாளை கிருஷ்ணசுவாமி கோவிலில் சுவாமிகள் வீதி உலா

Published On 2022-08-26 10:31 GMT   |   Update On 2022-08-26 10:31 GMT
  • திரளான பக்தர்கள் பங்கேற்பு
  • விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை அதிகாரிகளும் கிருஷ்ணசாமி பக்தர்கள் சேவா சங்கத்தினரும் செய்து வருகின்றனர்.

கன்னியாகுமாரி:

தோவாளை கிருஷ்ண சுவாமி கோவில் கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் உறியடி திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிறப்பு நிகழ்ச்சியாக 7-ம் திருவிழா அன்று கண்கவர் அலங்காரத்தோடு மலர் மாலையோடு ஸ்ரீ விநாயகப் பெருமான் மூஷிக வாகனத்திலும், முருகர் மயில் வாகனத்திலும், அம்மையப்பர் ரிஷப வாகனத்திலும், கிருஷ்ண சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும் பல்லக்கில் பக்தர்களோடு மேளதாளத்தோடு வீதி உலா வருதல் நடைபெற்றது.

நாளை (27-ந் தேதி)செண்டை மேளம் முழங்க உறியடி மகா உற்சவமும்,10-ம் திருவிழா அன்று மணிதட்டு வாக னத்தில் விநாயகர், முருகர், அம்மையப்பர், கிருஷ்ண சாமி ஆராட்டுக்கு எழுந்தரு ளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடு களை அறநிலையத் துறை அதிகாரிகளும் கிருஷ்ண சாமி பக்தர்கள் சேவா சங்கத்தினரும் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News