உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

நாகர்கோவில் பகுதியில் நாளை மின்தடை

Published On 2022-11-04 13:56 IST   |   Update On 2022-11-04 13:56:00 IST
  • கணேசபுரம் மற்றும் பள்ளம் மின்பாதையில் அவசர பராமரிப்பு பணி
  • மீனாட்சிபுரம் மின் விநிேயாக உதவி செயற்பொறியாளர் தகவல்

நாகர்கோவில்:

நாகர்கோவில் மீனாட்சிபுரம் மின் விநிேயாக உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மீனாட்சிபுரம், ஈத்தாமொழி பிரிவிற்குட்பட்ட கணேசபுரம் மற்றும் பள்ளம் மின்பாதையில் நாளை (5-ந்தேதி) அவசர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான சற்குணவீதி, மேலராமன்புதூர், ஐ.எஸ்.ஆர்.ஓ. வளாகம், சிவன் கோவில் தெரு மற்றும் வத்தக்காவிளை, கீரிவிளை, பிலாவிளை, சுண்டபற்றிவிளை உள்ளிட்ட இடங்களில் அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News