உள்ளூர் செய்திகள்

மக்கள் வசிக்கும் பகுதியில் காட்டு யானைகள் வராமல் தடுக்க ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

Published On 2023-10-31 06:27 GMT   |   Update On 2023-10-31 06:27 GMT
  • மாவட்ட வன அதிகாரி இளையராஜா தகவல்
  • யானை கூட்டம் அடிக்கடி உலா வருவதால் தொழிலாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

நாகர்கோவில் :

பேச்சிப்பாறையில் இருந்து கோதையாறு செல் லும் சாலையில் யானை களின் நடமாட்டம் அதிக ரித்து வருகின்றன. இந்த சாலையில் கோதமடக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 5 யானைகள் சாலை யை மறித்தவாறு நடுவே நின்று கொண்டிருந்தன.

அப்போது அந்த வழியாக வாகனங்களில் வந்த மின்வாரிய ஊழியர்கள், ரப்பர் கழக தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் யானை கூட்டத்தை கண்டு பீதியடைந்தனர். இதை யடுத்து சாலையின் இருபக்க மும் தங்களது வாகனங்களை ஓரமாக நிறுத்திவிட்டு மரண பயத்துடன் யானை கூட்டத்தை கண்காணித்து கொண்டிருந்தனர். ஆனால், அந்த யானை கூட்டம் சாலையை விட்டு நகராமல் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தன. சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு அந்த யானை கூட்டம் சாலையை விட்டு மெல்ல... மெல்ல நகரத் தொடங்கின.

இதையடுத்து சாலை யோரமாக வாகனங்களில் காத்திருந்த மின்வாரிய ஊழியர்கள், ரப்பர் கழக தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடனே அங்கி ருந்து வேகமாக புறப்பட்டு சென்றனர்.

இதுபோல் யானை கூட்டம் அடிக்கடி பேச்சிப்பாறை சாலையில் உலா வருவதால் தொழிலாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, வனத்துறையினர் யானைகளின் நட மாட்டத்தை கண்காணித்து சாலை வழியாக செல்லும் தொழிலாளர்கள், மின் வாரிய ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு நடவ டிக்கைகளை எடுக்க வேண்டுமென்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா கூறியதாவது:-

வழக்கமாக தென்மேற்கு பருவமழை காலங்களில் யானை கூட்டம், கேரள வன பகுதிகளில் சுற்றி திரிவது வழக்கம். இந்த நிலையில் தற்போது கன்னி யாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் புல் மற்றும் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ள தால் அவற்றை உணவுக்காக யானைகள் தேடி வருவ துண்டு.

தற்போது பேச்சிப்பாறை முதல் கோதையாறு வரை யானைகள் நடமாடி வருவ தாக கூறப்படும் பகுதி யானைகளின் வழித்தடங்கள் என்ற பட்டியலில் உள்ள பகுதிகளில் மட்டுமே அவை உலா வந்துகொண்டு இருக் கின்றன. முன்னர் ரப்பர் தோட் டங்களில் வாழை ஊடு பயிராக போடப்பட்டு இருந்ததால் அவற்றை உண்ண யானைகள் வரும். ஆனால், தற்போது வாழை களுக்கு பதிலாக அன்னாசி பழங்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. அதன் காரணமாகவும் யானைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

அதேநேரம் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் யானைகள் வராமல் இருக்க வேலிகள் அமைக்கப்பட் டுள்ளது. மற்றபடி யானை கள் அவற்றின் வழித்தடங் களில் மட்டுமே நடமாடி வருகிறது.

குறிப்பிட்ட சீசன் முடிவ டைந்ததும் இந்த யானைகள் இடம் பெயர்ந்து விடுவது வழக்கம். எனினும் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு யானை வராமல் இருக்க வனத்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வரு கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News