குமாரபுரத்தில் ஓம் கான்கிரீட் பிளாக் நிறுவனம் திறப்பு
- முதல் விற்பனையை ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவில் நிர்வாகத்தினர் பெற்றுக் கொண்டனர்.
- குறிப்பிட்ட நேரத்தில் பால்பிங்கர் வாகனம் மூலம் பொருட்கள் ஏற்றி இறக்கி தரப்படும்
நாகர்கோவில் :
ஆரல்வாய்மொழி முப்பந்தல் கோவில் அருகில் புதிதாக தொடங்கப்பட்ட ஓம் கான்கிரீட் பிளாக் நிறுவனம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு நிறுவனர் தினேஷ் தலைமை வகித்தார். நிறுவனத்தை தினேசின் தந்தை கல்லூரி முதல்வர், முன்னாள் பேராசிரியர் கணபதி திறந்து வைத்தார். முதல் விற்பனையை அவரது தாய் தமயந்தி தொடங்கி வைத்தார். திருமதி தினேஷ் வரவேற்றார். ஆரல்வாய்மொழி உஷா ஆஸ்பத்திரி டாக்டர் உஷா தியாகராஜன், டாகடர் தியாகராஜன் குத்து விளக்கேற்றி வைத்தனர். முதல் விற்பனையை ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவில் நிர்வாகத்தினர் பெற்றுக் கொண்டனர்.
ஓம் கான்கிரீட் பிளாக் நிறுவனத்தில் 6, 8, 10 இன்ச் சைஸ்களில் சாலிட் கான்கிரீட் செங்கல்கள், பிளை ஆஷ் பிரிக்ஸ், இன்ட ர்லாக்கிங்டைல்ஸ், இண்டர் லாக்கிங் பேவர்கள், இண்டர் லாக்கிங் செங்கல்கள் உள்ளிட்ட கற்கள் தயார் செய்யப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர் களின் கட்டுமான நிறுவனங்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப குறித்த நேரத்தில், குறிப்பிட்ட நேரத்தில் பால்பிங்கர் வாகனம் மூலம் பொருட்கள் ஏற்றி இறக்கி தரப்படும். கட்டிடத்தின் முதல் தளம் வரை ஏற்றி தரப்படும்.
நிகழ்ச்சியில், வி.ஐ.பி. கார்டன் உரியமயாளர் சுயம்புலிங்கம், ஏதன் கார்ஸ் உரிமையாளர் ராபின்சன், கங்கா லாட்ஜ் உரிமையாளர் கங்காதரன் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.