உள்ளூர் செய்திகள்

இரு சிலிண்டர் உள்ளவர்களுக்கும் முதியோர் உதவி தொகை வேண்டும் - தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2022-07-23 07:01 GMT   |   Update On 2022-07-23 07:01 GMT
  • ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளவர்களுக்கு மட்டும் உதவித்தொகை
  • இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வைத்திருக்கும் முதியோர்களுக்கு உதவித் தொகை நிறுத்தப்படும்

நாகர்கோவில்:

தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் பாதுகாப்பற்ற நிலையில் வறிய நிலையில் வாழும் முதியோர்களுக்கு அரசின் சார் பில் ரூ.1,000 உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வைத்திருக்கும் முதியோர்களுக்கு உதவித் தொகை நிறுத்தப்படும் என்ற அரசு திடீரென அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு முதியோர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது.

ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளவர்களுக்கு மட்டும் உதவித்தொகை என்ற அறிவிப்பை தொடர்ந்து இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வைத்திருப்பவர்கள் ஒன்றை திரும்ப ஒப்படைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன் சிலிண்டர்வைப்பு தொகை ரூ.450 மட்டுமே இருந்தது.

எனவே அந்த எரிவாயு சிலிண்டரை திருப்பி ஒப்படைக்கும் போது ரூ.450 மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரே வைப்புத் தொகையின் மூலம் இரண்டு சமையல் எரி வாயு சிலிண் டரை பெற்றவர்கள் ஒரு சிலிண்ட ரை மட்டும் ஒப்படைக்க முடியாது.

இரண்டு சிலிண்டர்களை யும் ஒன்றாகதான் ஒப்படைக்க முடியும். அப்படி ஒப்படைக்கப்படும்போது அவர்களுக்கு இரண்டு சிலிண்டர்களுக்கான வைப்புத் தொகையாக ரூ.900 வழங்கப்படுகிறது.

அதன் பிறகு புதிதாக ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் பெற வைப்புத் தொகையாக ரூ.2,500 ரூபாய் கட்டி சமையல் எரிவாயு சிலிண் டர் பெறுகின்ற சூழ்நிலை ஏற்பட் டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு முதியோர் உதவித் தொகை பெற ஒரு சமையல் எரிவாயு என்ற அரசின் புதிய உத்தரவினை ரத்து செய்து முதல்வர் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News