உள்ளூர் செய்திகள்

கோவில்களில் தரிசனத்திற்கு கட்டணம் வசூலிக்க கூடாது - இந்து முன்னணி மாநில தலைவர் பேட்டி

Published On 2022-06-29 08:51 GMT   |   Update On 2022-06-29 08:51 GMT
  • இந்து கோவில்கள் வருமானத்தை எடுத்துக் கொள்ளும் அரசு அதனை கோவில் பணிகளுக்குச் செலவிடுவதில்லை
  • கட்டணம் வசூலிக்கும் கோவில்கள் முன்பு இந்து முன்னணி சார்பில் போராட்டம்

கன்னியாகுமரி:

தமிழகத்தில் இந்துக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் பிரசார பயணத்தை, இந்து முன்னணி தொடங்கி உள்ளது. அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை யில் திருச்செந்தூரில் நேற்று தொடங்கிய பிரசார பயணம் இன்று கன்னியாகுமரி வந்தது.

அப்போது மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிர மணியம் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த பிரசார பயணம் பல்வேறு மாவட்டங்கள் வழியாக சென்று ஜூலை 31-ந் தேதி சென்னையில் நிறைவு பெறுகிறது. இன்று மாலை நாகர்கோவிலில் பிரசார கூட்டம் நடக்கிறது. இந்து கோவில்கள் வருமானத்தை எடுத்துக் கொள்ளும் அரசு அதனை கோவில் பணிகளுக்குச் செலவிடுவதில்லை. மற்ற மதங்களில் இந்த நிலை இல்லை. எனவே இந்து கோவில்களுக்கு வாரியம் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக இந்து முன்னணி வலியுறுத்தி வருகிறது. இதன் ஒரு முயற்சி தான் இந்த பிரசார பயணம். 90 சதவீதம் கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலை தான் இன்று உள்ளது.

பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டணம் வசூலிக்ககூடாது. கட்டணம் வசூலிக்கும் கோவில்கள் முன்பு இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்துவோம்.

ஆதீனங்களையும், மடாதிபதி களையும் தி.மு.க. மிரட்டி வருகிறது. இதை இந்து முன்னணி வன்மை யாக கண்டிக்கிறது.கடந்த ஒராண்டில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் இடிக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில செயலாளர் டாக்டர் அரசுராஜா, பேச்சாளர் வக்கீல் அசோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News