உள்ளூர் செய்திகள்

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா

Published On 2023-10-11 06:43 GMT   |   Update On 2023-10-11 06:43 GMT
  • 15-ந் தேதி தொடங்குகிறது
  • அஷ்டமங்கள் தேவபிரசன்ன பரிகார பூஜைகள் நடக்கிறது.

கொல்லங்கோடு :

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடத்தப்படும். இது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இதுதவிர கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா, வித்யாரம்பம் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இந்த திருவிழா 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு வழக்கமான பூஜைகளான லலிதா சகஸ்ர நாமம், லட்சார்ச்சனை, மாலை 5.30 மணிக்கு சங்கீதார்ச்சனை சங்கீத சதஸ் மற்றும் நவராத்திரி விசேஷ பூஜைகள் நடக்கிறது.

24-ந் தேதி காலை 8 மணி முதல் குழந்தைகளுக்கு முதன் முதலாக கற்பிக்கின்ற வித்யா ரம்பம் நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் 4-ம் திருவிழா, முதல் தந்திரி ஆலிவாசேரி நீலமன மடம் பிரம்மஸ்ரீ ஈஸ்வரன் போற்றி தலைமையில் அஷ்டமங்கள் தேவபிரசன்ன பரிகார பூஜைகள் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராமச்சந்திரன் நாயர், செயலாளர் மோகன் குமார், பொருளாளர் சீனிவாசன் தம்பி, துணைத்தலைவர் சதிகுமாரன் நாயர், இணை செயலாளர் பிஜுகுமார். உறுப்பினர்கள் சுஜிகுமார். புவனேந்திரன் நாயர். ஸ்ரீகண்டன் தம்பி, ஸ்ரீகுமாரன் நாயர். பிஜு, சதிகுமாரன் நாயர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News