அஞ்சுகிராமம் அருகே கார் மோதி பால் வியாபாரி பலி
- அஞ்சுகிராமம் சுற்று வட்டார பகுதிகளில் சுந்தரம் பால் வியாபாரம் செய்து வந்தார்
- அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
நாகர்கோவில் :
நெல்லை மாவட்டம் ராதாபுரம் திருவம்பலபுரம் தெற்கு வீதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 60), பால் வியாபாரி.
இவர் அஞ்சுகிராமம் சுற்று வட்டார பகுதிகளில் பால் வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவு புன்னார்குளம் பகுதியில் சுந்தரம் தனது மோட்டார் சைக்கிளில் பால் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று இவரது மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுந்தரம் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.ரத்த வெள்ளத்தில் கிடந்த சுந்தரத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சுந்தரம் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான சுந்தரத்தின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமான அங்கு திரண்டு இருந்தனர்.