உள்ளூர் செய்திகள்
வடசேரி மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டபோது எடுத்த படம்
மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா
- வடசேரி மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது
- மாநில வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில், வடசேரி மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர் டாக்டர் அஜயா மஞ்சு தலைமையில் செவிலியர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அந்த மருத்துவமனைக்கு ஆக்சிஜன், சிலிண்டர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மாநில வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, வடசேரி துருவா கேபிள் டிவி உரிமையாளர் ஆர். ராஜாமணி, தேசிய தடகள உயரம் தாண்டுதல் கோல்டு மெடல் ஆறுமுகம் பிள்ளை மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக குடும்ப நல ஆலோசனை மைய தினேஷ் கிருஷ்ணா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.