உள்ளூர் செய்திகள்

மருங்கூர் சுப்ரமணியசாமிக்கு மயிலாடியில் ஆராட்டு விழா

Published On 2023-11-23 08:13 GMT   |   Update On 2023-11-23 08:13 GMT
  • ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
  • மாலை 6 மணிக்கு புத்தனார் கால்வாய் படித்துறையில் வைத்து சாமிக்கு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடந்தது.

நாகர்கோவில் :

மருங்கூர் சுப்ரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் 6-வது நாள் சூரசம்காரம் நடந்தது. விழாவின் 10-ம் நாளான நேற்று சுப்ரமணியசாமிக்கு ஆராட்டு விழா மயிலாடி நாஞ்சில் புத்தனாறு கால்வாய் அருகே ஆராட்டு மடத்தில் உள்ள படித்துறையில் வைத்து நடைபெற்றது.

இதற்காக சுப்ரமணியசாமி நேற்று மாலை 4 மணிக்கு வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மருங்கூரில் இருந்து மயிலாடிக்கு ஊர்வலமாக வந்தார். தொடர்ந்து சுப்ரமணியசாமிக்கு ஆராட்டு நடந்தது. மாலை 6 மணிக்கு புத்தனார் கால்வாய் படித்துறையில் வைத்து சாமிக்கு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடந்தது.

நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், மயிலாடி பேரூராட்சி தலைவி விஜயலட்சுமி பாபு, செயல் அலுவலர் அம்புரோஸ், துணைத்தலைவர் சாய்ராம், மருங்கூர் பேரூராட்சி தலைவி லட்சுமி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விஜய்வசந்த் எம்.பி., ஆராட்டு விழா கலை இலக்கிய பேரவை தலைவர் சுப்ரமணியம், பொதுச்செயலாளர் நாகராஜன், பொருளாளர் சுடலையாண்டி, மருங்கூர் அ.தி.மு.க. பேரூர் செயலாளர் சீனிவாசன், மயிலாடி பேரூர் பா.ஜனதா தலைவர் பாபு, மயிலாடி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் பெருமாள், பேரூர் அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் மணிகண்டன், பேரூராட்சி கவுன்சிலர்கள் பாமா கண்ணன், அன்ன சுமதி சுதாகர், மயிலாடி தே.மு.தி.க. பேரூர் செயலளார் மூர்த்தி, சிவம்கல் தொழிலக நிறுவனர் முருகேசன், சுதன் கல்பாலிசி நிறுவனர் சுதன் உள்பட பக்தர்கள் ஆயிரக்கணக்கா னோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுப்ரமணிசாமி மீண்டும் மருங்கூர் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News