கொரோனாவினால் நிறுத்தப்பட்ட கருங்கல் - நாகர்கோவில் நேரடி பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
- தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
- பாயின்ட் டூ பாயின்ட் பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை
கருங்கல் :
கருங்கல் பகுதிகளில் இருந்து தினந்தோறும் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரி வோர், வர்த்தகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் தினமும் நாகர்கோவில் சென்று வருகின்றனர். இவர்கள் காலையில் அலுவலக பணி நேரத்தில் சென்று சேரும் வகையிலும், மாலையில் பணி முடிந்தவுடன் ஊருக்கு வரும் வகையிலும் பாயின்ட் டூ பாயின்ட் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்சி னால் கருங்கல், பாலூர், திப்பிரமலை, மத்திகோடு, மாத்திரவிளை, திக்கணங்கோடு உள்ளிட்ட பகுதிகளை சார்ந்தவர்கள் பெரிதும் பயனடைந்து வந்தனர்.
இந்நிலையில் கொரோனா நோய் பரவி வந்த நேரத்தில் அதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக கருங்கல்-நாகர்கோவில் பாயின்ட் டூ பாயின்ட் பஸ் நிறுத்தப்ப ட்டது. அதன்பின் கொரோ னா தொற்று விலகிய பின் நிறுத்தப்பட்ட அனைத்து பஸ்களும் மீண்டும் இயக்கப்பட்டன. ஆனால் கருங்கல் - நாகர்கோவில் பாயின்ட் டூ பாயின்ட் பஸ் மட்டும் திரும்ப இயக்கப்படவில்லை. அதனால் காலையில் இந்த பஸ்ஸை நம்பி பணிகளுக்கு சென்று வந்த அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
எனவே கருங்கல் சுற்றுவட்டார பகுதி மக்களின் நலன் கருதி நிறுத்தப்பட்டுள்ள கருங்கல்-நாகர்கோவில் பாயின்ட் டூ பாயின்ட் பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.