உள்ளூர் செய்திகள்

கரும்பாட்டூர் ஊராட்சியில் தேசிய ஊரக திட்டப்பணிகளை ஆய்வு செய்த கர்நாடக குழுவினர்

Published On 2023-09-13 12:44 IST   |   Update On 2023-09-13 12:44:00 IST
  • 9 பேர் கொண்ட குழுவினர் நாகர்கோவிலுக்கு வந்தனர்
  • காணொளி மூலமாக நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

நாகர்கோவில் :

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை பார்வையிடுவதற்காக கர்நாடக மாநில திட்டக்குழு துணை தலைவர் பிரோத் கட்டே தலைமையில் முன்னாள் எம்.பி. நாராயணசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பட்டேல் ஆகியோர் அடங்கிய 9 பேர் கொண்ட குழுவினர் நாகர்கோவிலுக்கு வந்தனர். மாநகராட்சி அலுவலகத்தின் செயல்பாடுகளை அவர்கள் பார்வையிட்டனர்.

பின்னர் இந்த குழுவினர் கரும்பாட்டூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை ஆய்வு செய்தனர். பின்னர் சோட்ட பணிக்கன்தேரிவிளை சமுதாய நலக்கூடத்தில் தமிழகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி, வட்டார ஊராட்சி, கிராம ஊராட்சி செயல்பாடுகள் குறித்து காணொளி மூலமாக நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் தங்கமலர் சிவபெருமான், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, உதவி இயக்குனர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் அனிதா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பின்னர் இந்த குழுவினர் கேரளா புறப்பட்டு சென்றனர்.

Tags:    

Similar News