உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 9 நிலையுடன் 120 அடி உயரத்தில் அமையும் ராஜகோபுரம்

Published On 2023-08-02 13:28 IST   |   Update On 2023-08-02 13:28:00 IST
  • கட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியது
  • பிரபா ராம கிருஷ்ணன் சென்னையில் அமைச்சர் சேகர்பாபுவை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் 3ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மிகவும் பழமையான கோவிலாகும். இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானஉள்நாட் டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும்வந்துஅம்மனை தரிசனம் செய்துவிட்டுசெல் கிறார்கள்.

இந்தகோவிலுக்கு ராஜகோபுரம் கட்டும் பணி அஸ்திவாரத்தோடு நின்று போய் விட்டது. ராஜகோபுரம் கட்டுமான பணி நின்று போய் பல நூற்றாண்டுகளை கடந்து விட்டதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லாதது பெரும் குறையாகவே இருந்து வருகிறது.

எனவே இந்த கோவிலுக்குமிகப் பிரம்மாண்டமானவகையில் ராஜகோபுரம் கட்டவேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டுவதற்கான முயற்சிகள் பல கட்டமாக எடுக்கப்பட்டு கடைசியில் தோல்வியில் முடிந்ததுஉள்ளது.

கடைசியாக கடந்தசிலஆண்டுகளுக்கு முன்பு கோவிலின் வடக்கு பக்கம் உள்ள பிரதான நுழைவு வாசல் மற்றும் கோவிலின் கிழக்குப் பக்கம் கடற்கரையையொட்டி அமைந்துள்ள கிழக்கு வாசல் ஆகிய இடங்களில் இரட்டை ராஜகோபுரம் கட்டுவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டன. அந்த இரட்டைராஜகோபுரம் கட்டும் பணியும் முதல்கட்ட ஆய்வோடு கிடப்பில் போடப்பட்டது.

இந்தநிலையில் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் தி.மு.க.அரசு பொறுப் பேற்ற பிறகு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவிலில் ராஜகோபுரம் கட்டுவதற் கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இது சம்பந்தமாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் சென்னையில் அமைச்சர் சேகர்பாபுவை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம்கட்டநடவடிக் கை மேற்கொள்ளும்படி அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அதன் பயனாக குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் அறிவுரையின் பேரில் நெல்லை மண்டல இந்து சமய அறநிலையத்துறை ஸ்தபதி செந்தில், குமரிமாவட்ட திருக்கோவில்களின் மராமத்து பிரிவு பொறியாளர் ராஜ்குமார், அறநிலையத்துறை சர்வேயர் அய்யப்பன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் ஆகியோர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டுவது தொடர்பாக ஏற்கனவே கட்டப்பட்டு பாதியில் நின்று போன ராஜகோபுரத்தின் அஸ்திவார பகுதியை நிலஅளவீடு செய்து முதல் கட்டபூர்வாங்க பணியை தொடங்கினர்.

இந்த புதிய ராஜகோபுரம் 9 நிலையுடன் 120 அடி உயரத்தில் அமைய உள்ளது.

Tags:    

Similar News