உள்ளூர் செய்திகள்

ஐ.ஆர்.இ. சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்

Published On 2023-11-22 12:40 IST   |   Update On 2023-11-22 12:40:00 IST
  • இலவச கண் மருத்துவ முகாமினை திருநெல்வேலி அரவிந்த் கண் ஆஸ்பத்திரியுடன் இணைந்து நடத்தியது.
  • முகாமில் 455 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

மணவாளக்குறிச்சி :

மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ. தனது நிறுவன சமூக பொறுப்பின் கீழ் பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட தேவிகோடு சி.எஸ்.ஐ சமூகநலக் கூடத்தில் இலவச கண் மருத்துவ முகாமினை திருநெல்வேலி அரவிந்த் கண் ஆஸ்பத்திரியுடன் இணைந்து நடத்தியது.

முகாமை தேவிகோடு சி.எஸ்.ஜ. சேகரசபை போதகர் ஜஸ்டஸ், பாலப்பள்ளம் பேரூராட்சி தலைவர் டென்னிஸ் மற்றும் ஐ.ஆர்.இ. துணைப்பொது மேலாளர் (சுரங்கம் மற்றும் வள ஆதாரங்கள்) சிவராஜ் முன்னிலையில் தொடங்கி வைத்தார். முகாமில் கண்புரை நோய், சர்க்கரை நோய், கண்ணீர் அழுத்த நோய், குழந்தை கண்நோய், கிட்டப் பார்வை, தூரப்பார்வை மற்றும் வெள்ளெழுத்து பரிசோதனைகள் செய்யப்பட்டது. முகாமில் 455 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். 225 பேருக்கு கண் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் திருநெல்வேலி அரவிந்த் கண் ஆஸ்பத்திரி மருத்துவ குழுவினர், ஐ.ஆர்.இ. நிறுவன அதிகாரிகள், தேவிகோடு சி.எஸ்.ஐ.சேகரசபை செயலாளர் சாலமன் பால், உதவி போதகர் ராஜன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News