உள்ளூர் செய்திகள்

சின்னமுட்டம் படகு தளத்தில் 2 கடத்தல் படகுகள் தீப்பிடித்தது எப்படி?

Published On 2023-08-01 07:21 GMT   |   Update On 2023-08-01 07:21 GMT
  • 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
  • 100-க்கும் மேற்பட்ட புதிய படகுகள் தீ விபத்தில் இருந்து தப்பின.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. துறைமுகத்தின் அருகே படகு கட்டும் தளமும் உள்ளது.

கேரள பதிவு எண் கொண்ட 2 கடத்தல் படகுகள், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு படகு கட்டும் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் இந்த படகுகளில் திடீரென தீ பிடித்தது.

இது பற்றி தகவல் கிடைத்ததும் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பென்னட் தம்பி மற்றும் நிலைய சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்த னர். நாகர்கோவில் தீய ணைப்பு நிலைய அலுவலர் ஜான் தாமஸ் தலைமையிலும் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நள்ளிரவு 1 மணி வரை போராடி தீ அணைக்கப்பட் டது. இருப்பினும் 2 கடத்தல் படகுகளும் தீயில் எரிந்து நாசமாயின. தீயணைக்கும் படை வீரர்களின் துரித நடவடிக்கையால் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட புதிய படகுகள் தீ விபத்தில் இருந்து தப்பின.

கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

படகு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? என்பது மர்மமாக உள்ளது. யாராவது சிகரெட் துண்டை அணைக்காமல் போட்டதால் விபத்து ஏற்பட்டிருக்கலாமா? அல்லது மர்மநபர்கள் விஷம செயலில் ஈடுபட்டி ருக்கலாமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News