உள்ளூர் செய்திகள்

குளச்சலில் விடியவிடிய கனமழை

Published On 2023-11-23 12:56 IST   |   Update On 2023-11-23 12:56:00 IST
கட்டுமரங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை

குளச்சல் :

குளச்சலில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு முதல் குமரி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குளச்சல் சுற்று வட்டார பகுதியில் விடிய விடிய மழை பெய்தது. இதனால் குளச்சல் பாம்பூரி வாய்க்காலில் மழை வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. வெள்ளியாகுளம் நிரம்பி உள்ளது. கடல் பகுதியிலும் மழை பெய்ததால் கட்டுமரங்கள், பைபர் வள்ளங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அவை மணற்பரப்பில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஒரு சில கட்டுமரங்களே கடலுக்கு சென்றன. அவற்றுள் போதுமான மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் குளச்சலில் இன்று மீன் வரத்து குறைந்தது. தவிர குளச்சல் கடல் பகுதியில் தற்போது நடந்து வரும் கடல் பாறையில் சிப்பி மீன் எடுக்கும் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன் பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர்.

Tags:    

Similar News