உள்ளூர் செய்திகள்

உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிக்கு கண்டனம் - சென்னை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க குமரி வணிகர்கள் முடிவு

Published On 2022-07-20 14:20 IST   |   Update On 2022-07-20 14:20:00 IST
  • ஒன்றிய அரசு உணவுப்பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.வரி உயர்வை நீக்க கோரி
  • சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நாகர்கோவில் :

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், அதன் தலைவர் நாகராஜன் தலைமையில் நடந்தது. ஒன்றிய அரசு உணவுப்பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.வரி உயர்வை நீக்க கோரியும், மாநில செஸ் வரி விதிப்பை மறுபரிசீலனை செய்து நீக்க வேண்டியும் வலியுறுத்தி சென்னையில் 22-ந் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

குமரி கிழக்கு மாவட்ட கிளை சங்கங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்க வலியுறுத்தியும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News