உள்ளூர் செய்திகள்

பொன்மனை பேரூராட்சியில் இலவச சித்த மருத்துவ முகாம்

Published On 2023-09-28 06:54 GMT   |   Update On 2023-09-28 06:54 GMT
  • முகாமில் பேரூராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
  • முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியான கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

திருவட்டார் :

பொன்மனை பேரூராட்சியும் முஞ்சிறை தனியார் கல்லூரி மருத்துவமனையும் இணைந்து பேரூராட்சி அலுவலகத்தில் இலவச சித்த மருத்துவ முகாமை நடத்தின. பேரூராட்சி தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் ஜெயமாலினி, துணை தலைவர் அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன் சாந்தி, கீது அமலாபுஷ்பம், சித்த மருத்துவ டாக்டர்கள் அரவிந்த், சுனிதா, மற்றும் பயிற்சி டாக்டர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முகாமில் பேரூராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். இருமல், சளி, தோல் நோய்கள், ரத்த அழுத்தம், கழுத்து, இடுப்பு, எலும்பு தேய்மானம், பெண்களுக்கான உடல் பருமன், தைராய்டு கோளாறு, மாதவிடாய் கோளாறு குழந்தைகளுக்கான கணம், உடல்மெலிவு போன்ற நோய்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மருந்துகளும் வழங்கப்பட்டன. முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியான கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News