நாகர்கோவிலில் என்ஜீனியர் திடீர் மாயம்
- நீண்ட நேரம் ஆகியும் கணேஷ் வீடு திரும்பவில்லை
- செல்போன் சிக்னல் உதவியுடன் தேடும் பணி நடந்து வருகிறது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் ரேச்சல் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் காந்தி. இவர் வடசேரியில் பேக்கரி நடத்தி வருகிறார். இவரது மகன் குர்சான் என்ற கணேஷ் (வயது 28), சாப்ட்வேர் என்ஜினியர். இவர் தற்போது தந்தையின் பேக்கரி கடையை கவனித்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த கணேஷ் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன்பிறகு நீண்ட நேரம் ஆகியும் கணேஷ் வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் பல்வேறு இடங்களிலும் தேடினார்கள். ஆனால் கணேஷ் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து காந்தி, வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து மாயமான கணேசை தேடி வருகிறார். அவரது செல்போன் சிக்னல் உதவியுடன் தேடும் பணி நடந்து வருகிறது.
வியாபார விஷயத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணேஷ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கலாமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.