உள்ளூர் செய்திகள்

வேர்கிளம்பி பேரூராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டிடப்பணிகள்

Published On 2022-09-26 13:41 IST   |   Update On 2022-09-26 13:41:00 IST
  • விஜய்வசந்த் எம்.பி தொடங்கி வைத்தார்
  • குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்.பி. நிதியில் இருந்து ரூ. 11 லட்சத்து 80 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

கன்னியாகுமரி:

வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகம் அருகில் அங்கன்வாடி செயல்பட்டு வந்தது. அந்த கட்டிடம் பழுதடைந்து மிக மோசமாக காணப்பட்டது. அதை மாற்றி புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் பேரூராட்சி தலைவர் சுஜீர் ஜெபசிங்குமாரிடம் கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கையை ஏற்று குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்.பி. நிதியில் இருந்து ரூ. 11 லட்சத்து 80 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தார். தொடர்ந்து அதற்கான கட்டுமான பணியினை விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர் ஜெபசிங் குமார் தலைமை தாங்கினார். துணை தலைவர் துரைராஜ் மனுவேல் முன்னிலை வகித்தார் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், வட்டார தலைவர் ஜெகன்ராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் ஏசுராஜா, காட்டாத்துறை ஊராட்சி தலைவர் இசையாஸ், துணைத் தலைவர் ஜெபதாஸ், கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜோண், வட்டார துணைத் தலைவர் ஒஸ்டின் ஞான ஜெகன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று குமரன்குடி ஊராட்சி புல்லாணி பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக ரூ.9 லட்சத்து 90 ஆயிரம் எம்.பி நிதியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கான பணிகளையும் விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News