உள்ளூர் செய்திகள்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.44 ஆயிரம் வசூல்

Published On 2022-07-26 07:17 GMT   |   Update On 2022-07-26 07:17 GMT
  • உண்டியல் மாதந்தோறும் பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்படுவது வழக்கம்
  • வருமானமாக ரூ.44 ஆயிரத்து 244 வசூல் ஆகி இருந்தது

கன்னியாகுமரி :

தாணுமாலயசாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

அவ்வாறு வருகின்ற பக்தர்கள் மதிய வேளையில் அன்னதானம் வழங்கும் வகையில் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதான உண்டியல் ஒன்றை வைத்துள்ளனர். இந்த உண்டியல் மாதந்தோறும் பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதேபோல் நேற்று கண்காணிப்பாளர் சிவக்குமார், மேலாளர் ஆறுமுகதரன், ஆய்வர் ராம லெட்சுமி, கணக்கர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

அதில் வருமானமாக ரூ.44 ஆயிரத்து 244 வசூல் ஆகி இருந்தது. இந்த தகவலை திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News