உள்ளூர் செய்திகள்

தேர் திருவிழாவில் சர்ச்சை: பாரதிய ஜனதாவினருக்கு முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் கண்டனம்

Published On 2022-06-12 07:24 GMT   |   Update On 2022-06-12 07:24 GMT
  • பாரதிய ஜனதாவினர் மீது முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் கண்டனம்
  • பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு

நாகர்கோவில், ஜூன்.12-

முன்னாள் அமைச்சரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான சுரேஷ்ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வேளிமலை முருகன் கோவிலில் நடந்த தேர் திருவிழாவில் மீன்வ ளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் தமிழக அரசின் பிரதிநிதியாக கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

அப்போது பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக அரசின் பிரதிநிதியாகவும், பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள அமைச்சர் மனோதங்கராஜ் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்ததில் என்ன தவறு இருக்கிறது. மதச்சார் பின்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தமிழக அரசின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் விழாக் களில் இதுநாள் வரையில் எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் நடந்து வந்தது.

இப்போது ஒற்றுமையாக இருக்கும் குமரி மாவட்ட மக்களிடையே குழப்பம் விளைவிக்கும் வகையில் பாரதிய ஜனதா நடந்து வருவது கண்டனத்துக்குரி யது.

இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News