உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் நில மோசடியில் ஈடுபட்டதாக போலீஸ்காரர் மீது வழக்கு

Published On 2023-03-26 13:39 IST   |   Update On 2023-03-26 13:39:00 IST
  • பணம் தேவைப்பட்டதால் 4 சென்டில் ஒரு சென்ட் நிலத்தை விற்க முடிவு செய்தனர்.
  • இருவர் மீதும் மோசடி உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

நாகர்கோவில் :

நாகர்கோவில் வடசேரி பரமார்த்திலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அசலவன் (வயது 62). இவரது சகோதரர் ராஜகோபால். இவர்களுக்கு சொந்தமான 4 சென்ட் நிலம் அதே பகுதியில் உள்ளது.ராஜகோபாலுக்கு மருத்துவச் செலவுக்காக பணம் தேவைப்பட்டதால் 4 சென்டில் ஒரு சென்ட் நிலத்தை விற்க முடிவு செய்தனர்.

இதை அறிய அதே பகுதியை சேர்ந்த தந்தை, மகன் இரு வரும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த நிலையில் ஒரு சென்ட் நிலத்திற்கு பதிலாக 4 சென்ட் நிலத்தையும் எழுதி வாங்கியதாக தெரிகிறது. மேலும் பேசிய பணத்தையும் கொடுக்கவில்லை.இதையடுத்து அசலவன் ஜுடிசியல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்து நீதிபதி இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மணிகண்ட பிரதீஸ்குமார் அவரது தந்தை ராஜேந்திரன் ஆகிய இருவர் மீதும் மோசடி உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் மணிகண்ட பிரதீஸ் குமார் நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் போலீசாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News