உள்ளூர் செய்திகள்

பள்ளி குழந்தைகளுடன் கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா சாமி, கலெக்டர் அரவிந்த் ஆகியோர் காலை உணவருந்திய காட்சி 

5-ம் வகுப்பு வரை வழங்கப்படும் காலை உணவு திட்டம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது

Published On 2022-11-23 13:48 IST   |   Update On 2022-11-23 13:48:00 IST
  • கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா சாமி பேட்டி
  • மாணவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

நாகர்கோவில்:

தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் மற்றும் குமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஜோதி நிர்மலா சாமி இன்று காலை பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்ப டும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோடு பகுதியில் மாணவர்களுக்கு 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் உணவு தயார் செய்யப்படும் இடத்தை நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது எத்தனை குழந்தைகளுக்கு உணவு தயார் செய்யப்படுகிறது. இங்கிருந்து பள்ளிகளுக்கு உணவு எப்படி அனுப்பி வைக்கப்படுகிறது போன்ற தகவல்களை கேட்டு அறிந்தார்.

பின்னர் செட்டி குளம் அரசு தொடக்கப் பள்ளி யில் மாணவ- மாணவி களுக்கு காலை உணவு வழங்கப்ப டுவதை பார்வையிட்டார். அப்போது குழந்தை களுடன் தரையில் அமர்ந்து ஜோதி நிர்மலாசாமி கலெக்டர் அரவிந்த் ஆர்.டி.ஓ. சிவப்பிரியா மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன் ஆகியோர் உணவை சாப்பிட்டனர்.

பின்னர் ஜோதி நிர்மலா சாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

செட்டிகுளம் அரசு பள்ளியில் நேரடியாக வந்து ஆய்வு செய்தோம். 52 குழந்தைகள் இங்கு உணவு சாப்பிடுகிறார்கள். பொங்கல் சாம்பார் குழந்தை களுக்கு மிகவும் பிடித்ததாக உள்ளது. உணவில் முந்திரி பருப்பு போடப்பட்டுள்ளது. குழந்தை களுக்கு சத்தான உணவாக இது அமைந்துள்ளது. குழந்தை களும் சந்தோசமாக இந்த உணவை சாப்பிட்டு வரு கிறார்கள். ஆசிரியர் இடம் இது குறித்து கேட்டோம். பெற்றோர்களுக்கு மிகவும் திருப்திகரமாக உள்ளது. அவர்கள் அவசரமாக வேலைக்கு செல்லும்போது சமைக்கின்ற வேலை இல்லை.

குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கப்படுவது மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்து உள்ளார்கள் .

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து நாகர்கோவில் எஸ் பி அலுவலகம் அருகே உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கான விடுதியையும் கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலாசாமி நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

அப்போது மாணவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து கிருஷ்ணன் கோவிலில் அமிர்த் திட டத்தின் கீழ் நடந்து வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News