உள்ளூர் செய்திகள்

சாமியார்மடம் பகுதியில் அனுமதியின்றி பா.ஜ.க. கொடிக்கம்பம் நட முயன்ற 65 பேர் மீது வழக்கு

Published On 2023-11-06 07:30 GMT   |   Update On 2023-11-06 07:30 GMT
  • மாலையில் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து பா.ஜ.க. கொடியை நாட்ட வந்தார்கள்.
  • 60 ஆண்கள், 5 பெண்கள் உட்பட மொத்தம் 65 பேர் மீது திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருவட்டார் :

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவிப்பின்படி நேற்று குமரி மாவட்டம் முழுவதும் பா.ஜ.க. கொடிக்கம்பம் நாட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. திருவட்டார் அருகே சாமியார்மடம் பகுதியில் நேற்று மாலையில் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து பா.ஜ.க. கொடியை நாட்ட வந்தார்கள்.

அதற்கு போலீஸ் அனுமதி வழங்கபட வில்லை. அனுமதியை மீறி அந்த பகுதியில் கொடிக்கம்பம் நட முயற்சி செய்தாக திருவட்டார் மேற்கு ஒன்றிய தலைவர் ராஜேஸ், செறுகோல் ஊராட்சி மன்ற தலைவர் அனுசன் அய்யப்பன், திருவட்டார் ஒன்றிய பார்வை யாளர் சுவாமிதாஸ், திருவட்டார் கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜ்குமார், ஏற்றக்கோடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணசிங், காட்டாத்துறை பகுதியை சேர்ந்த ஸ்ரீ உண்ணி சுரேஷ், செறுகோல் பகுதியை சேர்ந்த பிராங்கிளின், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஷீபா, திருவட்டார் பேரூராட்சி வார்டு உறுப்பினர் ராகிலா, காட்டாத்துறை பகுதியை சேர்ந்த மகேஷ் உட்பட 60 ஆண்கள், 5 பெண்கள் உட்பட மொத்தம் 65 பேர் மீது திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

Similar News