உள்ளூர் செய்திகள்

கொட்டாரம் அருகே விவசாயிகளுக்கு மின்கலத்தில் இயங்கும் தெளிப்பான்கள்

Published On 2022-07-25 06:54 GMT   |   Update On 2022-07-25 06:54 GMT
  • அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை குழு தலைவர் வழங்கினார்
  • மின்கலம் மூலம் இயங்கும் தெளிப்பான்களின் பயன்கள் பற்றியும் கையாளும் முறை பற்றியும் செயல் விளக்கம்

கன்னியாகுமரி :

அகஸ்தீஸ்வரம் வட்டா ரத்தில் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு மின்கலத்தில் இயங்கும் தெளிப்பான்கள் வழங்க தகுதியான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுஇருந்தது.இந்த நிலையில் அகஸ்தீஸ்வரம் வட்டாரத்தில் "அட்மா" திட்டத்தின் கீழ் மின்கலத்தில் இயங்கும் தெளிப்பான் செயல்விளக்கம் கொட்டாரம் அருகே உள்ள மந்தாரம்புதூர் கிராமத்தில் நடைபெற்றது.

இச்செயல் விளக்கத்தின் போது விவசாயிகளுக்கு மின்கலம் மூலம் இயங்கும் தெளிப்பான்களின் பயன்கள் பற்றியும் கையாளும் முறை பற்றியும் செயல் விளக்கம் செய்து காண்பிகப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை ஆலோசனை குழு தலைவர் தாமரைபாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மின்கலத்தில் இயங்கும் தெளிப்பான்களை வழங்கி னார். நிகழ்ச்சிக்கு வேளா ண்மை உதவி இயக்குனர் சுரேஷ் தலைமை தாங்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரின்ஸ் ஜெயசிங், உதவி தொழில்நுட்ப மேலாளர் நாகலெட்சுமி, ஜெயகுமாரி, கொட்டாரம் பேரூர்தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News