உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் பேசிய காட்சி

கன்னியாகுமரிக்கு வருகை தரும் அய்யப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்

Published On 2022-11-20 08:09 GMT   |   Update On 2022-11-20 08:09 GMT
  • அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவு
  • இரவு நேரங்களில் தெருவிளக்குகள் அனைத்தும் எரிவதற்கு உறுதி செய்திட வேண்டும்.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்திற்கு வருகை தரும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற் கொள்வது குறித்து பேரூராட்சிகள் உதவி இயக்குனர் (பேரூ ராட்சிகள்) மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடனான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலக சிறு கூட்ட அரங்கில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலெக் டர் அரவிந்த் கலந்து கொண்டு, துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற் கொண்டார்.

பின்னர் அவர் கூறியதா வது:-

கன்னியாகுமரிக்கு நவம்பர் மாதத்தில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்வரை அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்ப டுகிறது. எனவே அய்யப்ப பக்தர்க ளுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகளை கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி, சுகாதாரத்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

மேலும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை போக்குவரத் துக்கு இடையூறு இல்லாமல் உரிய இடத்தில் நிறுத்துவதற்கு ஏதுவாக இடங்களை ஏற்பாடு செய்வதோடு, இரவு நேரங் களில் எந்தவித பயமும் இல்லாமல் பொதுமக்கள் நடந்து செல்ல ஏதுவாக தெருவிளக்குகள் அனைத்தும் எரிவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் மின்சாரத்துறை மற்றும் பொதுப்பணித்துறை உறுதி செய்திட வேண்டும்.

மேலும் கன்னியா குமரியை சுற்றியுள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், உணவு பாதுகாப்புதுறை உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள் வதோடு, பிளாஸ்டிக் பயன் பாட்டை முற்றிலும் தவிர்ப்ப தற்கான துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகளுக்கு அபராதம் விதிப்பதோடு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) விஜய லெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News