உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்களை அலைக்கழிக்கும் போலீசார்

Published On 2023-11-21 07:14 GMT   |   Update On 2023-11-21 07:14 GMT
  • 2 கி.மீ. தூரம் நடந்து சென்று பகவதி அம்மனை தரிசிக்கும் அவலம்
  • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வர வேண்டும் என்றால் ஆட்டோ அல்லது வேறு போக்குவரத்து தேவைப்படுகிறது

கன்னியாகுமரி :

கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் தொ டங்கிய நிலையில் ஏராள மான அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வருகை தருகின்றனர். பஸ், கார் மற்றும் வேன்களில் வரும் அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் சிலுவை நகர் வழியாக காட்சி கோபுரம் அருகே உள்ள பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு காமராஜர் மண்டபம் வழியாக முக்கட லும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடலில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.

ஆனால் தற்போது சிலுவை நகரில் இருந்து சன்செட் பாயிண்ட் பகு திக்கு அய்யப்ப பக்தர் களின் வாகனங்களை போலீசார் அனுப்புவதால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தால் மட்டுமே கன்னி யாகுமரி பகவதி அம்மன் கோவில் சென்றடைய முடியும். ஏற்கனவே சபரிமலையில் தரிசனம் செய்து களைப்பில் வரும் அய்யப்ப பக்தர்கள், வயதான, ஊனமுற்ற பக்தர்கள் பலர் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.ஏற்கனவே நுழைவு கட்டணம் மற்றும் பார்க்கிங் கட்டணம் கட்டிவிட்டு வரும் அய்யப்ப பக்தர்கள் கூடுதலாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வர வேண்டும் என்றால் ஆட்டோ அல்லது வேறு போக்குவரத்து தேவைப்படுகிறது. இதற்காக ஒரு நபர் சுமார் ரூ.100 கூடுதலாக செலவு செய்ய வேண்டும்.

இதுவரை காட்சி கோபுரம் அருகே உள்ள பார்க்கிங் பகுதியில் வாகனங்கள் நிறுத்த இடம் இல்லை என்றால் மட்டும் பயன்படுத்தி வந்த சிலுவை நகர் பார்க்கிங்கில் அனைத்து வாகனங்களையும் அனுப்பும் நடைமுறை அய்யப்ப பக்தர்களை வேண்டும் என்றே அலைக்கழிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News