உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. பொன் விழா எழுச்சி மாநாட்டில் திரளான தொண்டர்கள் பங்கேற்க முடிவு

Published On 2023-07-13 06:59 GMT   |   Update On 2023-07-13 06:59 GMT
  • ஒன்றிய செயலாளர் ஜெஸீம் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்
  • அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் இருந்து மதுரையில் நடக்கிறது

கன்னியாகுமரி :

அ.தி.மு.க.வின் பொன் விழா எழுச்சி மாநாடு வருகிற ஆகஸ்ட் மாதம் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளர்.

அ.தி.மு.க. பொன் விழா எழுச்சி மாநாடு குறித்து அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்துக்குட்பட்ட பேரூர் செயலாளர்கள், ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் அஞ்சுகிராமம் பேரூர் அ.தி.மு.க. அலுவல கத்தில் நடைபெற்றது.

அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெஸீம் தலைமை தாங்கினார். அவைத்தலை வர் தம்பித்தங்கம், பொருளாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அஞ்சுகிராமம் பேரூர் செயலாளர் ராஜபாண்டியன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் பொன் விழா மாநாடு குறித்த விழிப்பு ணர்வு சுவரொட்டியை ஒன்றிய செயலாளர் ஜெஸீம் கட்சி நிர்வாகிகளிடம் வழங்கி பேசினார்.

கூட்டத்தில் பேரூர் செயலாளர்கள் சிவபாலன், மணிகண்டன், வீரபுத்திர பிள்ளை, மனோகரன், ஊராட்சி பொறுப்பாளர்கள் பார்த்தசாரதி, லட்சுமணன், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் பகவதியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரையில் வருகிற ஆகஸ்ட் 20-ந்தேதி நடை பெறும் அ.தி.மு.க.வின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் இருந்து 10-க்கும் மேற்பட்ட வாகனங் களில் திரளான தொண்டர் கள் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News