உள்ளூர் செய்திகள்

மக்களின் தேவைக்காக புத்தன் அணை நீரை 21 குடிநீர் தொட்டிகளில் ஏற்ற நடவடிக்கை - மேயர் மகேஷ் பேட்டி

Published On 2023-06-11 09:14 GMT   |   Update On 2023-06-11 09:14 GMT
  • முக்கடல் அணை தூர்வாரப்படாததால் ஒவ்வொரு ஆண்டும் கோடையில் தண்ணீர் பற்றாக்குறை
  • ரூ.16 கோடி செலவில் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நாகர்கோவில் :

நாகர்கோவில் மாநகர மக்களுக்கு முக்கடல் அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் முக்கடல் அணை தூர்வாரப்படாததால் ஒவ்வொரு ஆண்டும் கோடையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

எனவே புதிய குடிநீர் திட்டமாக புத்தன் அணை குடிநீர் திட்டத்தை செயல் படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. தற்போது புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாகர்கோவில் மாநகர மக்களுக்கு குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் புத்தன் அணை குடிநீர் திட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 95 சதவீத பணி கள் நிறைவடைந்துள்ளன. புத்தன் அணையில் இருந்து கிருஷ்ணன் கோவிலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டது. அப்போது 47 இடங்களில் நீர் கசிவு ஏற்பட்டது. அதை சரி செய்துவிட்டோம். புத்தன் அணை தண்ணீரை வீடுகளுக்கு வழங்க நாகர்கோ விலில் 11 இடங்களில் புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டி கள் கட்டப்பட்டுள்ளன. ஏற்கனவே 10 இடங்களில் குடிநீர் தொட்டிகள் உள் ளன.

இந்த நிலையில் புத்தன் அணையில் இருந்து 21 குடிநீர் தொட்டிகளிலும் தண்ணீர் ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

மேலும் ரூ.16 கோடி செலவில் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்து பொதுமக்க ளுக்கு தண்ணீர் கொடுக்கும் பட்சத்தில் நாகர்கோவில் மாநகர மக்களுக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படாது. தினமும் ஒருவருக்கு 125 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் வழங்கப் படும். நாகர்கோவில் மாநக ராட்சியை தன்னிறைவு பெற்ற மாநகராட்சியாக மாற்ற அனைத்து நடவ டிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

வளர்ச்சி பணிகள், சுகாதார பணிகள் அனைத் திற்கும் முன்னுரிமை அளித்து திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே சாலைகளை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்தன. தற்போது மேலும் ரூ.25 கோடி செலவில் சாலைகள் சீரமைக்கப்படு கிறது.

மாநகர பகுதியில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. ரூ.14 கோடி செலவில் டெண்டர் போடப்பட்டு அதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக குளச்சல் தொகுதிக்குட்பட்ட மாற்றுக்கட்சியை சேர்ந்த நிர்வாகி மணிமாறன் தலைமையில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை யில் தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மேயர் மகேஷ் வரவேற்றார்.

Tags:    

Similar News