உள்ளூர் செய்திகள்

அழுகிய பழங்கள்

தக்கலை பகுதியில் தரமற்ற பழங்களை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

Published On 2022-10-15 07:55 GMT   |   Update On 2022-10-15 07:55 GMT
  • அடிக்கடி நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்
  • கல் வைத்து விற்பனை செய்யும் பழங்கள் மற்றும் அழுகிய பழங்களை நூதன முறையில் விற்பனை

கன்னியாகுமரி:

தக்கலை பஸ்நிலையம் அருகில் தாலுகா அலுவலகம், கிராம அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், காவல் நிலையம், வட்ட வழங்கல் அலுவலகம் உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலகங்கள் உள்ளன.இங்கு காலை, மாலை வேளையில் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு சாலையோரம் பழ வியாபாரங்கள் வியாபாரிகள் செய்து வருகின்றனர்.

அங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் போலியான கவர்ச்சி விளம்பரங்கள் செய்து அழுகிய பழங்களை விற்பனை செய்து வருகின்ற னர். நேற்று முன்தினம் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் மாம்பழம் வாங்கியுள்ளார். பழத்தை வாங்கி பார்த்த போது அழுகி புழுக்கள் இருந்தன. உடனே கடைகாரரிடம் தகராறில் ஈடுபட்டார். இதே நிலைதொடர்ந்து இப்பகுதியில் நடைபெற்று வருகிறது. நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் பல வகை நோய்களுக்கு உள்ளாகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-

தக்கலை பிரபல பல் மருத்துவமனை அருகில் உள்ள சாலையோர கடைகளில் கல் வைத்து விற்பனை செய்யும் பழங்கள் மற்றும் அழுகிய பழங்களை நூதன முறையில் விற்பனை செய்து வரும் வியாபாரிகள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கூறினார்.

Tags:    

Similar News