உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

திருவட்டார் அருகே கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய இளம்பெண்

Published On 2022-11-22 08:24 GMT   |   Update On 2022-11-22 08:24 GMT
  • மணமகனுக்கு நோய் இருப்பதாக புகார் கூறியதால் பரபரப்பு
  • போலீசார் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் விசாரணை

கன்னியாகுமரி:

திருவட்டாரை அடுத்த செவரக்கோடு மருதாக்க விளையைச் சேர்ந்த 32 வயது வாலிபருக்கும் வெள்ளாங்கோடு பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது.

பெற்றோரை இழந்த இளம்பெண் கான்வெ ண்டில் படித்து வளர்ந்தவர். இவர்களது திருமணம் நேற்று நடை பெறுவதாக இருந்தது.தேமானூரில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் மாலை 3 மணிக்கு திருமணம் நடத்த திட்டமிடப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

உறவினர்கள் உள்பட பலரும் விழாவுக்கு வந்த நிலையில், மணப்பெண் வீட்டில் இருந்து யாரும் வராதது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக விசாரித்தபோது, மணமகனுக்கு மஞ்சள் காமாலை நோய் இருக்கிறது. எனவே திருமணத்தில் எங்களுக்கு விருப்பமில்லை என மணமகள் வீட்டார் கூறி உள்ளனர். இதனைக் கேட்டு மணமகன் வீட்டாரும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக திருவட்டார் போலீசில் மணமகன் புகார் செய்தார்.எனக்கு நோய் இருக்கிறது என நான் ஏற்கனவே கூறியுள்ளேன். என்னை திட்டமிட்டு அவமானப்ப டுத்தி, மனதளவில் வேதனைப்படுத்தி யுள்ளார்கள் என புகாரில் அவர் கூறியிருந்தார்.

மேலும் மணப்பெண்ணை அழைத்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், மணமகனுக்கு மஞ்சள் காமாலை நோய் இருப்பது எனக்கு இன்று காலையில் தான் தெரியும். ஏற்கனவே இவருக்கு நோய் இருப்பது தெரிந்திருந்தால் திருமணத்திற்கே சம்மதித்து இருக்க மாட்டேன்.

ஏற்கனவே தாய், தந்தையை இழந்து, உறவினர் பாதுகாப்பில்தான் வளர்ந்து வருகிறேன். எனவே இவரை திருமணம் செய்ய முடியாது என கூறியதாக போலீசார் தெரிவித்தனர். திருமண நாளில் மணமகள் திருமணத்தை நிறுத்தியது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News