உள்ளூர் செய்திகள்

தக்கலை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் திடீர் தீ

Published On 2023-08-11 10:58 GMT   |   Update On 2023-08-11 10:58 GMT
  • தினமும் ஏராளமான நோயாளிகள் வருவது வழக்கம்.
  • குப்பை கழிவுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது

நாகர்கோவில் :

தக்கலை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வருவது வழக்கம். இந்த மருத்துவமனையின் பின்புறம் பிணவறை உள்ளது. அதனருகில் மருத்துவ மனை ஊழியர்கள் குப்பை கழிவுகள் போடுவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை அந்த குப்பை கழிவுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் ஆஸ்பத்திரி வளாகம் பெரும் புகை மண்டலமாக காணப்பட்டது. இதை கண்ட நோயாளிகள் பலர் ஓட்டம் பிடித்தனர்.

இது பற்றி அருகில் உள்ள குடியிருப்பு மக்கள் தக்கலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் சிலர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு தீயை அணைந்தனர்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த தே.மு.தி.க. கவுன்சிலர் கூறும் போது, "தக்கலை அரசு மருத்துவமனையில் உள்ள கழிவுகளை அதற் கான குடியிருப்பு இல்லாத பகுதியில் கொட்டி எரித் தால் இது போன்ற சம்பவங்கள் நடக்காது. அரசு இது குறித்து ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார். மருத்துவமனை வளாகத்தில் திடீரென தீ பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News