உள்ளூர் செய்திகள்
கொட்டாரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகில் புதருக்குள் பதுங்கி இருந்த கண்ணாடி விரியன் பாம்பு
- வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டனர்
- பாம்பு சுமார் 8 அடி நீளம் கொண்டதாக இருந்தது
கன்னியாகுமரி :
கொட்டாரம் சார் பதிவாளர் அலுவலகம் எதிரில் உள்ள புதரில் கொடிய விஷம் உள்ள கண்ணாடி விரியன் பாம்பு பதுங்கி இருப்பதை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பார்த்து உள்ளனர். உடனே இது பற்றி கொட்டாரம் பேரூராட்சி 7-வது வார்டு கவுன்சிலர் செல்வன் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார்.
அதன் பேரில் வேட்டை தடுப்பு காவலர் சிவா தலைமையில் வனத்துறை யினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் புதருக்குள் பதுங்கி இருந்த கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை லாவகமாக பிடித்தனர்.
அந்த பாம்பு சுமார் 8 அடி நீளம் கொண்டதாக இருந்தது. பின்னர் வனத்து றையினர் அந்த பாம்பை பாதுகாப்பான காட்டுப்ப குதியில் கொண்டு விட்டனர்.