உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் டாக்டர் கார் கண்ணாடியை உடைத்து ரூ.85 ஆயிரம் கொள்ளை - மர்மநபர்கள் கைவரிசை

Published On 2022-07-23 07:31 GMT   |   Update On 2022-07-23 07:31 GMT
  • கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தபால் நிலையம் பகுதியில் காரை நிறுத்திவிட்டு அந்த பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றனர்.
  • சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நாகர்கோவில் :

ஈத்தாமொழி பகுதி யைச் சேர்ந்தவர் சிவகுமார் டாக்டர். இவர் ஈத்தாமொழி மற்றும் நாகர்கோவில் பகுதியில் ஆஸ்பத்திரி வைத்துள்ளார்.

நேற்று மாலை டாக்டர் சிவக்குமார் அவரது மருத் துவமனை நிர்வாக அதிகாரி அரவிந்த் ஆகிய இருவரும் நாகர்கோவிலுக்கு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தபால் நிலையம் பகுதியில் காரை நிறுத்திவிட்டு அந்த பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றனர்.

பின்னர் அவர்கள் வந்தபோது காரின் இடது பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. காரில் இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பேக் மற்றும் அதிலிருந்து ரூ.85 ஆயிரம் ரொக் கப்பணம், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவை திருடப்பட்டிருந்தது.

மேலும் மருத்துவ ஆவ ணங்கள் சிலவற்றையும் மர்ம நபர்கள் எடுத்துச் சென்றிருந்தனர். இது குறித்து அரவிந்த், நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், மணிகண்டன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவில் நகர பகுதியில் இதேபோல் கார்களின் கண்ணாடியை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற னர். அதே கும்பல் தற்பொ ழுது மீண்டும் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார் கள்.

அவர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். டாக்டர் காரின் கண்ணாடி உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News