உள்ளூர் செய்திகள்

குளச்சலில் 32.4 மில்லி மீட்டர் மழை

Published On 2023-08-29 12:30 IST   |   Update On 2023-08-29 12:30:00 IST
  • திடீர் மழையின் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி யடைந்தனர்.
  • குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் நீர்மட்டம் மைனஸ் 12 அடியாக நீடித்து வருகிறது

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

நேற்று காலையில் வழக்கம்போல் சுட்டெ ரிக்கும் வெயில் அடித்தது. மதிய நேரங்களில் அனல் காற்றும் வீசியது. இந்த நிலையில் நேற்று மாலை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

குளச்சல் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து குளச்சல் மெயின் ரோட்டில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அங்கு வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசியது. அங்கு அதிகபட்சமாக 32.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திடீர் மழையின் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி யடைந்தனர்.

இரணியல், பூதப்பாண்டி, கன்னிமார், தக்கலை பகுதிகளிலும் மழை பெய்தது. நாகர்கோவில் பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது. மழையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை அணைப்பகுதியிலும் மழை பெய்ததையடுத்து அணைக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 17.90 அடியாக இருந்தது. அணைக்கு 351 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 585 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ் சாணி அணை யின் நீர்மட்டம் 27.25 அடியாக உள்ளது. அணைக்கு 20 கனஅடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 11.28 அடியாகவும், சிற்றார்-2 அணை யின் நீர்மட்டம் 11.38 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 10.20 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 3.28 அடியாகவும் உள்ளது.

நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் நீர்மட்டம் மைனஸ் 12 அடியாக நீடித்து வருகிறது. நேற்று இரவு மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்த நிலையில் இன்று காலையில் வழக்கம்போல் வெயில் சுட்டெரித்தது.

Tags:    

Similar News