உள்ளூர் செய்திகள்

வீராணமங்கலம் பழைய ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை படத்தில் காணலாம்.

திற்பரப்பில் 26.4 மி.மீ. மழை

Published On 2022-11-10 13:19 IST   |   Update On 2022-11-10 13:19:00 IST
  • பேச்சிப்பாறையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் குறைப்பு
  • பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.50 அடியாக உள்ளது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை தற்போது சற்று குறைந்துள்ளது. நேற்று ஒரு சில பகுதிகளில் மட்டும் மழை பெய்தது.

திற்பரப்பு, குருந்தன் கோடு, முள்ளங்கினாவிளை, கோழிப்போர்விளை, ஆணைக்கிடங்கு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. திற்பரப்பில் அதிகபட்சமாக 26.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை சற்று குறைந்ததையடுத்து அணை களுக்கு வரக்கூடிய நீர்வ ரத்து குறைய தொடங்கி உள்ளது.

இதனால் பேச்சிபாறை அணையிலிருந்து வெளி யேற்றப்பட்ட உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது. திற்பரப்பு அருவி யில் தொடர்ந்து தண்ணீர் கொட்டி வருவதால் அருவியில் குளிப்பதற்கான தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.50 அடியாக உள்ளது.அணைக்கு 625 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 813 கன அடி உபரி நீராகவும் 122 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69. 60 அடியாக உள்ளது. அணைக்கு 486 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சிற்றார்-1 அணை நீர்மட்டம் 15.08 அடியாக உள்ளது. அணைக்கு 149 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 100 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 15.19 அடியாக உள்ளது.அணைக்கு 76 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. பொய்கை அணையின் நீர்மட்டம் 15.90 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணை நீர்மட்டம் 44.29 அடியாகவும் உள்ளது.

Tags:    

Similar News