உள்ளூர் செய்திகள்
தக்கலையில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கைது
- போலீசார் அதிரடி நடவடிக்கை
- தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.
தக்கலை :
தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து பாண்டியன் தலைமையில் போலீசார் நேற்று மாலை பழைய பஸ் நிலையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராமன்பறம்பு பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 29) மற்றும் சடையமங்கலம் பகுதியை சேர்ந்த சிவகுமார் (45) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் மதுபோதையில் வந்தனர். இருவரும் போலீசாரை கண்டதும் பைக்கை நிறுத்தி விட்டு தப்பியோட முயற்சிக்கவும் அவர்களை போலீசார் பிடித்து தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.
பரிசோதனையில் இவர்கள் இருவரும் மது அருந்தி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றது உறுதியானது. பின்னர் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு தலா ரூ.12 ஆயிரம் வீதம் ரூ.24 ஆயிரம் அபராதம் விதித்தனர்.