உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 16,409 பட்டா வழங்கப்பட்டுள்ளது - கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

Published On 2023-05-04 07:03 GMT   |   Update On 2023-05-04 07:03 GMT
  • சமத்துவபுரத்தில் வசிக்கும் குடும்பதாரர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா வழங்கப்படவில்லை.
  • இணைய வழி சேவை மூலமாக பட்டா உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

நாகர்கோவில் :

பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம் குறித்து கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

சமத்துவபுர திட்டமானது அனைத்துத்தரப்பட்ட மக்களும் எந்தவொரு வேற்றுமையும் இன்றி சமமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உரு வாக்கப்பட்ட திட்டமாகும். திருவட்டார் வட்டம், பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட பள்ளிமுக்கு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் வசிக்கும் குடும்பதாரர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா வழங்கப்படவில்லை.

பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் மாவட்ட நிர்வாகத்திடமும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சரிடமும் கோரிக்கை வைத்தார்கள்.

அவர்களது கோரிக்கை யினை நிறைவேற்றும் வகையில் வருவாய் துறை யின் சார்பில் சமத்துவபுரம் பகுதியில் வசிக்கும் தகுதியான பயனாளிகளுக்கு இலவச பட்டா வழங்கப்பட் டுள்ளது. மேலும், இணைய வழி சேவை மூலமாக பட்டா உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

பட்டா ஒரு அடிப்படை ஆவணமாகும். பட்டா இருந்தால்தான் தமிழ்நாடு அரசால் பல்வேறு துறைகளின் சார்பில் வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளை பெற முடியும்.

தமிழ்நாடு அரசு மூலமாக விழிம்பு நிலை மக்களுக்கு பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலை பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. பட்டா வழங்கு வது, பொதுமக்கள் வசிப்பதற்கு வீடு கட்டி தருவது, இடவசதி தருவது, பல்வேறு விதமான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது போன்ற சேவைகள் வழங்கபட்டு வருகிறது.

மாவட்டத்தில் பட்டா தொடர்பான கோரிக்கை மனுக்கள் அதிக அளவில் வருவதைதொடர்ந்து அம்மனுக்களின் கோரிக்கை களுக்கு விரைவில் தீர்வு காண துறை சார்ந்த அரசு அலுவலர்களுக்கும் அறிவு ரை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டு காலத்தில் மொத்தம் 16,409 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News